/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாய்க்கால் தடுப்பு கட்டையை சீரமைக்க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோரிக்கை வாய்க்கால் தடுப்பு கட்டையை சீரமைக்க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோரிக்கை
வாய்க்கால் தடுப்பு கட்டையை சீரமைக்க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோரிக்கை
வாய்க்கால் தடுப்பு கட்டையை சீரமைக்க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோரிக்கை
வாய்க்கால் தடுப்பு கட்டையை சீரமைக்க முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோரிக்கை
ADDED : ஜூன் 22, 2024 04:51 AM

பரங்கிப்பேட்டை, : வேளங்கிப்பட்டு கிராமம், மானம்பாத்தான் வாய்க்காலில் சேதமடைந்துள்ள தடுப்பு கட்டையை சீரமைத்துத்தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம், கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு;
பரங்கிப்பேட்டை அடுத்த வேளங்கிப்பட்டு கிராமத்தில் மானம்பாத்தான் வாய்க்காலில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டது. இதன் மூலம் வேளங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பாசனம் செய்து பயனடைந்து வந்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தடுப்பு கட்டை உடைந்துவிட்டது. இதனால், விவசாயிகள் வாய்க்காலிலில் இருந்து தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மானம்பாத்தான் வாய்க்கால் கிழக்கு கரை சாலையாக மாற்றப்படாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், கிழக்கு கரையை அகலப்படுத்தி சாலை அமைத்துத்தர வேண்டும். இது விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான இடுப்பொருட்கள் மற்றும் அறுவடை நேரங்களில் நெல், வைக்கோல் வீட்டிற்கு எடுத்து செல்ல வசதியாக இருக்கும். எனவே, வாய்க்காலில் உடைந்துபோய் உள்ள தடுப்பு கட்டையை சீரமைத்தும், மானம்பாத்தான் வாய்க்கால் கிழக்கு கரையில் சாலை அமைத்துத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறியுள்ளார்.