/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி 'அட்வைஸ்' திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி 'அட்வைஸ்'
திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி 'அட்வைஸ்'
திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி 'அட்வைஸ்'
திருமண மண்டப உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரி 'அட்வைஸ்'
ADDED : ஜூன் 20, 2024 03:47 AM

பண்ருட்டி : திருமண மண்டபத்தை சுகாதாரமாக பராமரிக்க, உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஆலோசனை வழங்கினார்.
பண்ருட்டி நகராட்சி பகுதியில் உள்ள திருமண மண்டப மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், உணவுபாதுகாப்புத்துறை சார்பில் நேற்று நடந்தது. மண்டப உரிமையாளர்கள் சங்க தலைவர் விஜயரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் பேசினார். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுப்பிரமணியன், நல்லதம்பி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், திருமண மண்டபங்களை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும், சமையல் கூடங்களை சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும், உணவில் நச்சு ஏற்படாமல் பாதுகாப்பான உணவை சமைத்து வழங்க வேண்டும், மண்டபங்களுக்கு உரிமம் பெறவேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழங்கினர்.
திருமண மண்டப உரிமையாளர் சங்க பொறுப்பாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.