ADDED : ஜூன் 20, 2024 03:47 AM
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறை சார்பில், நீர்நிலைகளில் விழுந்தால் காப்பாற்றுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
நெல்லிக்குப்பம் தீயணைப்பு துறை சார்பில், பருவமழை காலங்களில் நீர்நிலைகளில் தண்ணீரில் தவறி விழுந்தால் தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது குறித்து விழிப்புணர்வு செயல் விளக்கம் நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த குணமங்கலம் ஏரியில் நடந்த நிகழ்ச்சியில் நிலைய அலுவலர் கவிதா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.