/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 1 கோடி பொருட்கள் சேதம் தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 1 கோடி பொருட்கள் சேதம்
தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 1 கோடி பொருட்கள் சேதம்
தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 1 கோடி பொருட்கள் சேதம்
தொழிற்சாலையில் தீ விபத்து ரூ. 1 கோடி பொருட்கள் சேதம்
ADDED : ஜூலை 28, 2024 06:27 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருகே வத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த தொரப்பாடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர், அதே பகுதியில் வத்தி, சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் நேற்றிரவு 10:45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, காற்று பலமாக வீசியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்த பண்ருட்டி, முத்தாண்டிக்குப்பம், நெல்லிக்குப்பம் ஆகிய தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும் தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இச்சம்பவம் குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.