/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சூறாவளியால் சாய்ந்த மின்கோபுரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு சூறாவளியால் சாய்ந்த மின்கோபுரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
சூறாவளியால் சாய்ந்த மின்கோபுரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
சூறாவளியால் சாய்ந்த மின்கோபுரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
சூறாவளியால் சாய்ந்த மின்கோபுரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
ADDED : ஜூன் 06, 2024 09:04 PM

ஸ்ரீமுஷ்ணம்:கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடி, பூண்டி, குணமங்கலம் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அதில் பூண்டி கிராமத்தில் நிலத்தின் வழியாக நெய்வேலியில் இருந்து கும்பகோணம் அடுத்த கடலங்குடி துணை மின் நிலையத்திற்கு செல்லும் 230 கே.வி., உயர் அழுத்த மின் கோபுரம் அடியோடு முறிந்து விழுந்தது.
இதனால் பூண்டி கிராமத்தில் நிலங்களில் உள்ள 10க்கும் மேற்பட்ட தாழ்வழுத்த மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பூண்டி, கள்ளிப்பாடி கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் முறிந்து விழுந்த மின் கம்பங்களை அகற்றி, மின் இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டனர்.
விழுப்புரம் மற்றும் நெய்வேலியில் இருந்து வந்த மின்வாரிய உயரதிகாரிகள் கோபுரம் சாய்ந்த இடத்தை பார்வையிட்டு மின் இணைப்பு தருவதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
இரவு நேரத்தில் சூறாவளி காற்று வீசி மின் கோபுரம் சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.