Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீட்டிற்கு வந்து விற்கப்படும் உரங்களை வாங்க வேண்டாம்: இணை இயக்குனர்

வீட்டிற்கு வந்து விற்கப்படும் உரங்களை வாங்க வேண்டாம்: இணை இயக்குனர்

வீட்டிற்கு வந்து விற்கப்படும் உரங்களை வாங்க வேண்டாம்: இணை இயக்குனர்

வீட்டிற்கு வந்து விற்கப்படும் உரங்களை வாங்க வேண்டாம்: இணை இயக்குனர்

ADDED : ஜூன் 10, 2024 01:12 AM


Google News
கடலுார் : தனி நபர்கள் மூலம் வீட்டிற்கு வந்து விற்கப்படும் உரங்களை விவசாயிகள் வாங்க வேண்டாம் என வேளாண்மை இணை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறி்த்து கடலுார் மாவட்ட வேளாண இணை இயக்குனர் ஏழுமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் தற்போது 8000 ஹெக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு வளர்ச்சி பருவத்தில் உள்ளது. சாகுபடிக்கு தேவையான யூரியா 9031 மெட்ரிக் டன், டி.ஏ.பி 2136 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1530 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ், 9633 மெட்ரிக் டன் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரவிற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள், தங்களுக்கு தேவையான உரங்களை அங்கீகரிக்கப்பட்ட தனியார் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி தங்களது ஆதார் எண்ணை வழங்கி முறையாக உரிய ரசீதுடன் உரங்களை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தங்களது கிராமங்களுக்கே நேரடியாக வந்து ஒரு சில தனி நபர்கள் மூலம் விற்கப்படும் உரங்களை நம்பி வாங்க வேண்டாம். அவ்வாறு தங்களை அணுகி உரம் தொடர்பாக தகவல் தெரிவிக்கும் நபர்கள் அல்லது உரம் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

உரம் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் கடலுார் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக, வேளாண்மை உதவி இயக்குனர் 9087157057, வேளாண்மை அலுவலர் 8754386163 மற்றும் அனைத்து வட்டார வேளாண்மை அலுவலர், உர ஆய்வாளருடன் உடன் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us