ADDED : ஜூலை 10, 2024 04:23 AM

கடலுார், : சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.
சிதம்பரம் ரோட்டரி தலைவர் அருண் வரவேற்றார்.டாக்டர்திருப்பதி தலைமை தாங்கினார்.ரோட்டரி செயலாளர் பாலாஜி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். டாக்டர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் பங்கேற்ற கலெக்டர் அருண் தம்புராஜ், மருத்துவர்கள் பல உயிர்களை காப்பாற்றுவதால் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுகிறார்கள். அதற்கேற்ப புனித சேவையில் டாக்டர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மூத்த டாக்டர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
டாக்டர்கள் சுப்ரமணியம், கண் மருத்துவர் வாசுதேவன், குழந்தை நல மருத்துவர் பாலசந்தர். லாவண்யாகுமாரி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.