/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., துண்டு பிரசுரம்
ADDED : ஜூலை 09, 2024 05:53 AM

விருத்தாசலம், : தி.மு.க., அரசை கண்டித்து, விருத்தாசலத்தில் அ.தி.மு.க., சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகர செயலாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன், மாநில ஜெ., பேரவை துணை செயலாளர் அருள்அழகன் முன்னிலை வகித்தனர்.
நகர அவை தலைவர் தங்கராசு, நகர பொருளாளர் முக்தார் அலி, பொதுக்குழு உறுப்பினர் வேங்கட வேணு, மாணவர் அணி செயலாளர் செல்வகணபதி, மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வளர்மதி கண்ணன், சுப்புபிள்ளை, நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன், வட்ட செயலாளர்கள் செந்தில், கோவி ரஞ்சித், நகர ஜெ., பேரவை இணை செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் நகர துணை செயலாளர் சத்யா செல்வம், புஷ்பா வேங்கடவேணு மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் குடித்து பொதுமக்கள் பலியான சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
மாநிலத்தில் நடக்கும் தொடர் படுகொலைகளை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து, கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், அப்போது, தி.மு.க., அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.