/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர பெண் மனு வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர பெண் மனு
வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர பெண் மனு
வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர பெண் மனு
வெளிநாட்டில் இறந்த கணவர் உடலை மீட்டுத்தர பெண் மனு
ADDED : ஜூலை 09, 2024 05:53 AM

கடலுார் : வெளிநாட்டில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் மனு கொடுத்தார்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த இளங்காம்பூரை சேர்ந்த தமிழரசன் மனைவி ஜோகன்னால் தேவ கிருபை, தனது குழந்தைகளுடன் கொடுத்துள்ள மனு;
எனது கணவர் தமிழரசன், கடந்த 2021 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு டிரைவர் வேலைக்கு சென்றார். கடந்த 2023 ஆம் ஆண்டு வாகன விபத்தில் காயமடைந்த எனது கணவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்ததாக தெரிவித்தனர்.
பின் அவர் இறந்துவிட்டதாகவும் கூறினர். எனது கணவர் உடல் தொடர்பாக இதுவரை யாரும் பதிலும் தெரிவிக்கவில்லை.
எனவே, விசாரணை நடத்தி எனது கணவர் உடலை மீட்டுத்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.