/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல் தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
தவ அமுதம் மெட்ரிக் பள்ளியில் 'தினமலர்-பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 03, 2024 03:01 AM

ஸ்ரீமுஷ்ணம், : ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் செங்கோல், முதல்வர் புனிதவள்ளி ஆகியோர், பள்ளியில் பயிலும் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் 300 மாணவ மாணவிகளுக்கு 'தினமலர்- பட்டம்' இதழை வழங்கினர்.
பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.