Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பண்ருட்டி அருகே 8 ம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு 

பண்ருட்டி அருகே 8 ம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு 

பண்ருட்டி அருகே 8 ம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு 

பண்ருட்டி அருகே 8 ம் நூற்றாண்டை சார்ந்த பல்லவர்கால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு 

ADDED : ஜூன் 20, 2024 08:42 PM


Google News
Latest Tamil News
பண்ருட்டி: பண்ருட்டி அருகே பல்லவர்கால கொற்றவை சிற்பம் கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

பண்ருட்டி அடுத்த கரும்பூர் - அவியனூர் செல்லும் சாலையில், மூத்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வாளர் மங்கையர்கரசி , தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் களப்பணி மேற்கொண்டனர். அப்போது, அவியனூர் சாலையில் உள்ள தனியார் வயலில் பலகை கல் ஒன்று இருப்பதை கண்டு ஆய்வு செய்ததில், அது, பல்லவர் கால கொற்றவை என கண்டறிந்தனர்.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன் கூறியதாவது:

கண்டறியப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பம், நான்கரை அடி உயரம், இரண்டே முக்கால் அடி அகலம் கொண்ட கல்லில் செதுக்கப்பட்டது ஆகும். சிற்ப ஆகம விதிப்படி கொற்றவை சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மகிஷன் (எருமை) தலை மீது நேராக நின்ற நிலையில் கொற்றவை காட்சியளிக்கிறார். கொற்றவை எட்டு கரக்ககளில் வலக்கரங்களில் சங்கு, நீண்ட வாள், அம்பு முன் கைதொடையில் தாங்கியவாறு காட்டப்பட்டுள்ளது. இடக்கரங்களில் சக்கரம், வில், கேடயம், சாட்டை ஆகிய ஆயுதங்கள் முஸ்டி முத்திரையில் பற்றியுள்ளார்.

தலையை கரண்ட மகுடமும், வலது காதில் நீண்ட பட்டையான ஆபரணம் , இடக்காதில் குறுகிய குண்டலகும் அணிந்துள்ளார். கழுத்தை அட்டிகையும் ஆரமும் அழகு செய்கின்றன. கணுகால்களில் தண்டை அலங்கரிக்கிறது. கொற்றவையின் வலப்பக்கம் இரு அடியவர்கள் காட்டப்பட்டுள்ளனர். மகிஷன் தலையில் அருகே நின்ற நிலையில் அடியவர் ஒருவர் வணங்கிய வாரும், மற்றொரு அடியவர் பூஜை பொருட்கள் கொண்ட பெட்டியை இடதுகையில் ஏந்தியவாறு உட்குடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.

கொற்றவையின் வலது பக்கத்தில் உள்ள அடியவர் கொற்றவையின் பெருமையை உயர்த்தி பாடுவதுபோல் காட்டப்பட்டுள்ளார். அடியவர் ஒருவர் நிவந்தம் (வேண்டுதல் பொருட்டு தன்தலையை தானே அறிந்து கொள்ளும் அடியவர் காட்டப்படவில்லை. கொற்றவையின் வாகனமான, மானோ சிங்கமோ? காட்டப்பட வில்லை.

பொதுவாக கொற்றவையின் மேல் வலகையில் காட்டப்படும் சங்கு சக்கரமாகும். இடக்கையில் காட்டப்படும் சங்கும் இச்சிற்பத்தில் மாறாக உள்ளது. இக்கொற்றவை சிற்ப அமைதியை கொண்டு இது பல்லவர் கலைப்பாணி கொண்டதாகும். தமிழக சிற்பகலைக்கு இது ஒரு புதிய வரவாகும்

. இவ்வாறு ஆய்வாளர் வீரராகவன் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us