/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பாதிப்பு சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பாதிப்பு
சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பாதிப்பு
சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பாதிப்பு
சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பாதிப்பு
ADDED : ஜூன் 20, 2024 08:41 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அம்மா உணவகம் அருகே சாலையில் கழிவுநீர் ஓடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னை- கன்னியாக்குமரி தொழிற்தட சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக கடலூரில் இருந்து மடப்பட்டு வரை, சாலை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில், நெல்லிக்குப்பம் நகரில் சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் கட்டினர். அதை தொடர்ச்சியாக கட்டாமல் பல இடங்களில் இணைப்பு இல்லாமல் குறையாக உள்ளது. வீடுகள்,கடைகளின் கழிவுநீரை கால்வாயில் விடுகின்றனர். வடிகால் இணைப்பு இல்லாதால் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் நிலை உள்ளது. அந்த வகையில், ீழ்பட்டாம்பாக்கம் அம்மா உணவகம் எதிரில் சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவதால் சாப்பிட வருவோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வழியாக நடந்து செல்பவரும் முகச்சுளிப்புடன் செல்லும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.