/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நெல்லிக்குப்பத்தில் வயிற்று போக்கு : பொதுமக்கள் அச்சம் நெல்லிக்குப்பத்தில் வயிற்று போக்கு : பொதுமக்கள் அச்சம்
நெல்லிக்குப்பத்தில் வயிற்று போக்கு : பொதுமக்கள் அச்சம்
நெல்லிக்குப்பத்தில் வயிற்று போக்கு : பொதுமக்கள் அச்சம்
நெல்லிக்குப்பத்தில் வயிற்று போக்கு : பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜூன் 14, 2024 06:23 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஜீவா நகரில் பலர் வயிற்று போக்கால் பாதித்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்
நெல்லிக்குப்பம் நகராட்சி ஜீவா நகரில் 1500க்கும் மேற்பட்டடோர் வசித்து வருகின்றனர்.இதில் அப்பகுதி தி.மு.க.,கவுன்சிலர் மகேஸ்வரியின் கணவர் சீனிவாசன் உட்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடந்த சில நாட்களாக வயிற்று போக்கு நோயால் பாதித்துள்ளனர். இவர்கள் தொடர்ந்து அரசு,தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நகராட்சி மூலம் வழங்கும் குடிநீர் அல்லது கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் நோய் பாதித்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கூறினர். உடனடியாக நகராட்சி மருத்துவர்கள் அப்பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி, வயிற்றுப் போக்கிற்கான காரணத்தை அறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.