மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
மாதர் சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 09, 2024 05:54 AM

திட்டக்குடி, : திட்டக்குடி தாலுகா, எழுத்துார் கிராம மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் திட்டக்குடி பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கிளை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவப்பிரகாஷ், பெரியசாமி, அஞ்சலை, எழில்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகக்குழு சுப்ரமணியன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகி, மங்களூர் ஒன்றியசெயலாளர் நிதிஉலகநாதன், நல்லுார் ஒன்றியசெயலாளர் முருகையன், மாதர் சங்க மாவட்டபொருளாளர் அம்பிகா, ஒன்றியகுழு ராஜ்குமார், காசிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் திட்டக்குடி தாலுகா, எழுத்துார் திடீர்குப்பம் பகுதி, ஆதிதிராவிட பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா, ரேஷன்அட்டை தாரர்கள் கூடுதலாக உள்ளதால் புதிய ரேஷன்கடை அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.