மர்மமான முறையில் பசு மாடுகள் இறப்பு
மர்மமான முறையில் பசு மாடுகள் இறப்பு
மர்மமான முறையில் பசு மாடுகள் இறப்பு
ADDED : ஜூலை 09, 2024 05:54 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே மர்மமான முறையில் 3 பசு மாடுகள் இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் அடுத்த புலியூரைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ், 55; கதிர்வேல், 60; இவர்களது மூன்று மாடுகள் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அதே பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றது.
மாலை 5:00 மணியளவில் குருநாதன் என்பவரது நிலத்தின் அருகே உள்ள சீமை கருவேல மர தோப்பில், மர்மமான முறையில் மூன்று பசு மாடுகள் இறந்து கிடந்தது.
தகவலறிந்த ஆலடி போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர். 3 பசு மாடுகள் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.