வடலுார்: வடலூரில், மா.கம்யூ., சார்பில் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் வடலூர் நகர அமைப்பு செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார்.
குறிஞ்சிப்பாடி நகர அமைப்பு செயலாளர் மணிவண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணி, கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார்.
ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜி, சிவகாமி, சரவணன், வழக்கறிஞர் குமரகுரு, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அழகுமுத்து, கதிர்வேல், அஞ்சலை, ராஜேஷ், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.