ADDED : ஜூலை 15, 2024 11:51 PM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் லாட்டரி விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காட்டுக்கூடலுார் ரோடு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கோவிந்தராஜ், 52, என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து, கோவிந்தராஜை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.