ADDED : ஜூலை 07, 2024 04:03 AM
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுாரைச் சேர்ந்தவர் பார்வதி, 44; இவரது மகள் சத்தியா, 27; இவர், கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, பார்வதி கொடுத்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.