/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி
விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி
விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி
விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி
ADDED : ஜூலை 07, 2024 04:02 AM
விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் ஊராட்சி, க.புதுார் கிராம விவசாயிகளுக்கு கிராம அளவிலான வேளாண் வளர்ச்சி திட்ட பயிற்சி நடந்தது.
அனைத்து கிராம கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடந்த பயிற்சிக்கு, வேளாண் உதவி இயக்குனர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். துணை வேளாண் அலுவலர் பிரான்சிஸ், உதவி வேளாண் அலுவலர் ராஜிவ்காந்தி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் தங்கதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், பஞ்சமூர்த்தி உட்பட விவசாயிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை சார்ந்த மானியங்கள், அவற்றின் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.