/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூட்டுறவு பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு கூட்டுறவு பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
கூட்டுறவு பட்டயப் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூன் 11, 2024 06:17 AM
கடலுார்: கடலுார் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மண்டல இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-2025ம் ஆண்டிற்கான ஒரு ஆண்டு முழு நேர கூட்டுறவு லேமாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடக்கிறது.
பயிற்சி இரண்டு பருவ முறைகள் கொண்டது. பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10+3+3 (பத்தாம் வகுப்பு தேர்ச்சி+பட்டய பயிற்சி தேர்ச்சி+ ஏதாவது பட்டப் படிப்பு தேர்ச்சி) பெற்றவர்கள் பயிற்சியில் சேரலாம்.
01.8.2024 அன்று 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். நேற்று முதல், ஜூலை 19ம் தேதி வரை www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் 100 ரூபாயை இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும்.
பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பித்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகலையும், சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்திற்கு நேரில் அல்லது பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
பயிற்சி கட்டணம் 18,750 ரூபாயை ஒரே தவணையில் இணையவழியில் செலுத்த வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண்-3, பீச்ரோடு, சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை, கடலுார் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04142-222619 என்ற தொலைபேசி எண்ணிலும், icmcuddrmgr@gamil.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.