/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அதிகாரியை அழைத்துச் செல்லாததால் பழிவாங்கப்படும் ஒப்பந்த ஊழியர்கள் அதிகாரியை அழைத்துச் செல்லாததால் பழிவாங்கப்படும் ஒப்பந்த ஊழியர்கள்
அதிகாரியை அழைத்துச் செல்லாததால் பழிவாங்கப்படும் ஒப்பந்த ஊழியர்கள்
அதிகாரியை அழைத்துச் செல்லாததால் பழிவாங்கப்படும் ஒப்பந்த ஊழியர்கள்
அதிகாரியை அழைத்துச் செல்லாததால் பழிவாங்கப்படும் ஒப்பந்த ஊழியர்கள்
ADDED : ஜூன் 11, 2024 11:22 PM
கடலுார் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள நகராட்சியில் டிரைவர்கள் மற்றும் குடிநீர் வினியோக திட்டப்பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் சிலர் பணிநியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சம்பளம் மாதம்தோறும் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள், 30நாட்களும் பணி செய்தும் 24நாட்களுக்கே சம்பளம் வழங்கப்படுவதாக புலம்புகின்றனர்.
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதால் யாரிடமும் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும், நகராட்சி மேலாளரை தினமும் அவரது வீட்டிற்கு கொண்டு போய்விடுவதற்கும், மறுநாள் அழைத்து வருவதற்கும் நகராட்சி வாகனத்தை பயன்படுத்தி வந்தனர். 30 கி.மீ., துாரமுள்ள அவரது வீட்டிற்கு தினமும் சென்றுவருவதால், டீசல் செலவு அதிகரித்தது. இதனால் மாதத்திற்கு அனுமதிக்கப்பட்ட அளவு டீசலை விட அதிக எரிபொருள் செலவாகியது. இது குறித்து கமிஷனர் கேள்விகேட்பதால் நகராட்சி வாகனத்தில் மேலாளரை வீட்டில் கொண்டுபோய் விடுவதற்கு டிரைவர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் டிரைவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒப்பந்த ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.