ADDED : ஜூலை 03, 2024 02:56 AM
கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் கிளை இந்தியன் வங்கி அதிகாரிக்கு பணி நிறைவு பாராட்டு விழா மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தில் நடந்தது.
மாவட்ட வங்கி ஊழியர் சங்கத் தலைவர் மீரா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் இந்தியன் வங்கி ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் பழனிகுமார் பேசினார்.
இந்தியன் வங்கி ஊழியர் கூட்டுறவு சங்கத் தலைவர் கணேசன், ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் திருமலை, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், செயலாளர் குருபிரசாத் வாழ்த்திப் பேசினர். பணி நிறைவு பெற்ற அசோக்ராணி ஏற்புரையாற்றினார்.