ADDED : ஜூன் 22, 2024 04:58 AM
கடலுார் : தினமலர் செய்தி எதிரொலியால், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் புதர்மண்டிய சிறுவர் பூங்கா சீரமைக்கப்பட்டது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்திற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளிக்க வந்துச் செல்கின்றனர்.
பொது மக்களுடன் வந்து செல்லும் சிறுவர்கள் பயன்பாட்டிற்காக கலெக்டர்அலுவலக வளாகத்தில் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்காவை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால், விளையாட்டு உபகரணங்கள் ஆங்காங்கே உடைந்து புதர்மண்டியை பயன்படுத்த முடியாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.
இது குறித்து தினமலர் நாளிதழில் சில தினங்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதன் எதிரொலியாக, கலெக்டர் அலுவலகத்தில் சிறுவர் பூங்காவில் புதர் அகற்றப்பட்டது.
மேலும், விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.