/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சி.என்.பாளையம் அம்மன் கோவிலில் 2ம் தேதி செடல் சி.என்.பாளையம் அம்மன் கோவிலில் 2ம் தேதி செடல்
சி.என்.பாளையம் அம்மன் கோவிலில் 2ம் தேதி செடல்
சி.என்.பாளையம் அம்மன் கோவிலில் 2ம் தேதி செடல்
சி.என்.பாளையம் அம்மன் கோவிலில் 2ம் தேதி செடல்
ADDED : ஜூலை 30, 2024 11:24 PM

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 2ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது.
சி.என்.பாளையம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா, கடந்த 25 ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று காலை 108 குடம் தண்ணீர் ஊர்வலமாக எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது.
ஆக., 1ம் தேதி காலை அம்மனுக்கு பட்டு சாத்தும் நிகழ்ச்சி, இரவு முத்து பல்லக்கில் வீதியுலா நடக்கிறது. 2ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை வரையில் செடல் திருவிழா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.