/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கால்நடை வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் கால்நடை வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்
கால்நடை வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்
கால்நடை வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்
கால்நடை வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூலை 30, 2024 11:23 PM
கடலுார் : கடலுார் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில், வானிலை அடிப்படையிலான கால்நடை வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை, புதுச்சேரி வானிலை ஆய்வாளர் பாலமுருகன் 'வேளாண்மை மற்றும் கால்நடை விவசாயிகளுக்கான முன்னறிவிப்பு விளக்கங்கள் மற்றும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பில் பேசினார்.
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பொன்னம்பலம், 'வானிலை அடிப்படையிலான கால்நடை வளர்ப்பு முறைகள்' என்ற தலைப்பில் பேசினார். ஒருங்கிணைப்பாளர் தமிழ்வாணன், கால்நடை உற்பத்தி மேலாண்மை குறித்து பேசினார். விவசாயிகளுக்கு தானுவாஸ் தாது கலவை மற்றும் தீவன விதைகள் வழங்கப்பட்டது.
முகாமை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மைய உதவிப் பேராசிரியர் சிலம்பரசன், சென்னை கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை உதவிப் பேராசிரியை திவ்யலட்சுமி ஒருங்கிணைத்தனர்.