/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புதுச்சேரி சரக்கு கடத்திய 6 பேர் மீது வழக்கு புதுச்சேரி சரக்கு கடத்திய 6 பேர் மீது வழக்கு
புதுச்சேரி சரக்கு கடத்திய 6 பேர் மீது வழக்கு
புதுச்சேரி சரக்கு கடத்திய 6 பேர் மீது வழக்கு
புதுச்சேரி சரக்கு கடத்திய 6 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 05, 2024 04:51 AM

கடலுர் : கடலுார் ஆல்பேட்டையில் அதிகாரிகள் நடத்திய கூட்டு சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள், சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு சம்பவம் எதிரொலியாக கடலுார், ஆல்பேட்டையில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் செந்தில்குமார் தலைமையில், கலால் தனி தாசில்தார் ஆறுமுகம், டாஸ்மாக் உதவி மேலாளர் பூபாலசந்திரன், மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், பஸ், ஆட்டோ, சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனையில் செய்தனர்.
சோதனையில் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 சாராய பாக்கெட்டுகள், 2 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, அங்கேயே கீழே கொட்டி அழித்தனர்.
சாராயம் மற்றும் மதுபாட்டில் கடத்தி வந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.