மரத்தில் கார் மோதல்; பொறியாளர் பலி
மரத்தில் கார் மோதல்; பொறியாளர் பலி
மரத்தில் கார் மோதல்; பொறியாளர் பலி
ADDED : ஜூலை 10, 2024 05:18 AM

திட்டக்குடி : திட்டக்குடி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் பொறியாளர் இறந்தார். இருவர் படுகாயமடைந்தனர்.
சிதம்பரம், வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் நடராஜன்,57; அண்ணாமலை பல்கலையில் பொறியாளராக பணி புரிந்து வந்தார்.
இவரது மகள் தரண்யா,21; பெரம்பலுாரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் படித்து வருகிறார். அவரை நேற்று காலை நடராஜன், அவரது மனைவி இந்திரா,50, ஆகியோர், கல்லுாரியில் விட்டுவிட்டு டாடா டியாகோ காரில் சிதம்பரத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமம் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர புளிய மரத்தில் மோதி, அருகில் நின்றிருந்த பைக் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நடராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
படுகாயமடைந்த இந்திரா மற்றும் பைக் அருகில் நின்றிருந்த இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்த பாலுசாமி ஆகியோர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.