/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பாய்ந்த கவுன்சிலர்கள் பம்பிய அதிகாரிகள் பாய்ந்த கவுன்சிலர்கள் பம்பிய அதிகாரிகள்
பாய்ந்த கவுன்சிலர்கள் பம்பிய அதிகாரிகள்
பாய்ந்த கவுன்சிலர்கள் பம்பிய அதிகாரிகள்
பாய்ந்த கவுன்சிலர்கள் பம்பிய அதிகாரிகள்
ADDED : ஜூலை 10, 2024 04:38 AM
மங்களூர் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில், தீர்மானங்கள் வாசித்ததில், ஊராட்சிகள் தோறும் சுகாதார பணியாளர்கள் நியமனம் செய்து, அவர்களுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது, 'நடக்காத பணிக்கு பொய் கணக்கு கூறி, தங்களை ஏமாற்றுவதாக அதிகாரிகள் மீது கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். மேலும், மக்கள் பிரதிநிதிகள் பதவிக்காலம் சில மாதங்களில் முடியவுள்ள நிலையில், ஒன்றிய பொது நிதியில் மக்கள் பயன்பெறும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அதிகாரிகளிடம் கூறினர். கவுன்சிலர்கள் திடீரென ஆவேசமாக பேசியதை எதிர்பாராத அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் பம்பினர்.