/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிறுமியை கடத்திய வழக்கு போக்சோவில் வாலிபர் கைது சிறுமியை கடத்திய வழக்கு போக்சோவில் வாலிபர் கைது
சிறுமியை கடத்திய வழக்கு போக்சோவில் வாலிபர் கைது
சிறுமியை கடத்திய வழக்கு போக்சோவில் வாலிபர் கைது
சிறுமியை கடத்திய வழக்கு போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜூன் 14, 2024 06:37 AM
பண்ருட்டி: பண்ருட்டி அருகே சிறுமியை கடத்தி சென்றவரை போக்சோ சட்டத்தின்கீழ் பண்ருட்டி மகளிர் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, இவர் கடந்த ஏப்ரல் மாதம் 27ம்தேதி காணவில்லை.
இதுகுறித்து அவரது தாய் கொடுத்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சிறுமியை தேடி வந்தனர்.
போலீஸ் விசாரணையில் திருத்துறையூர் குயவர் வீதியை சேர்ந்தவர் அய்யனார் மகன் விஜயன்,21; சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து புதுப்பேட்டை போலீசில் இருந்த சிறுமி மாயமான வழக்கு பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையிலான மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விஜயன்,21; கைது செய்தனர்.