/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குற்றப்பிரிவில் கறுப்பு ஆடுகள்; எஸ்.பி., களையெடுப்பாரா குற்றப்பிரிவில் கறுப்பு ஆடுகள்; எஸ்.பி., களையெடுப்பாரா
குற்றப்பிரிவில் கறுப்பு ஆடுகள்; எஸ்.பி., களையெடுப்பாரா
குற்றப்பிரிவில் கறுப்பு ஆடுகள்; எஸ்.பி., களையெடுப்பாரா
குற்றப்பிரிவில் கறுப்பு ஆடுகள்; எஸ்.பி., களையெடுப்பாரா
ADDED : ஜூலை 10, 2024 04:38 AM
கடலுார் மாவட்டத்தில் பெரிய அளவில் உள்ள குற்றங்களை விசாரிக்க, மாவட்ட குற்றப்பிரிவு செயல்பட்டு வருகிறது. எஸ்.பி., யின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியது.
இதற்கு முன்பு பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் மற்றும் குழுவினர் திறம்பட பணியாற்றி இப்பிரிவிற்கென 'நற் பெயரை' ஏற்படுத்தினர். தற்போது உள்ள சிலரால் இந்த பிரிவிற்கு களங்கம் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இருந்து பணத்தை, பொருளை, ஏமாற்றப்பட்டவர்கள் என பலர் எஸ்.பி., யிடம் நேரில் சந்தித்து விளக்கினால் ஏதாவது நடக்கும் என்கிற நம்பிக்கையில் புகார் கொடுக்கின்றனர்.
அவ்வாறு அளிக்கப்படும் புகாரகள் மீது விசாரணை நடத்தும் சிலர், பாதிக்கப்பட்ட புகார்தாரரை விரட்டியடிப்பது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குழைந்து பேசுவது, அவர்களை தனிமையில் சந்தித்து பேசி வழக்கில் இருந்து தப்பிக்க ஐடியாக்கள் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், முக்கிய பிரிவாக குற்றப்பிரிவுக்கே அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது. ஏனோ, தானோ என்று விசாரணை நடத்தி புகார் மனுவை முடித்துவிடுவதிலே குறியாக உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமல் போய்விடுகிறது.
உள்ளூர் போலீசில் பணியாற்ற முடியாதவர்கள் ஒதுங்கும் இடமாக குற்றப்பிரிவு இருக்கக் கூடாது. விசாரணை அதிகாரிகள் உண்மையான ஈடுபாடும், நியாயத்தை நிலைநாட்டுபவர்களாக இருந்தால்தான் எஸ்.பி.,க்கும், ஆளும் தி.மு.க., விற்கு நற்பெயரை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.