/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம் பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம்
பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம்
பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம்
பைக்குகள் மோதல் ஒருவர் பலி; 2பேர் காயம்
ADDED : ஜூன் 06, 2024 02:56 AM
வடலுார்: கடலுாரில் பைக்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவரம் காயமடைந்தனர்.
வடலுார் அருகே மேலகொளக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜவர்மன், 34; அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் மகன் தமிழ்ச்செல்வன், 35; இருவரும், பைக்கில் நேற்று மதியம் வடலுாரில், சேத்தியாத்தோப்பு சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது, வடலுார் மகிமை தாஸ் மகன் தோமினிக் வின்சென்ட் ராஜ் 23; ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. விபத்தில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு ராஜவர்மன் பரிதாபமாக உயிரிழந்தார். தமிழ்ச்செல்வன், தோமினிக் வின்சென்ட் ராஜ் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து வடலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.