/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புவனகிரி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் தேவை புவனகிரி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் தேவை
புவனகிரி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் தேவை
புவனகிரி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் தேவை
புவனகிரி பேரூராட்சிக்கு செயல் அலுவலர் தேவை
ADDED : ஜூன் 06, 2024 02:51 AM
புவனகிரி: புவனகிரி பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் இல்லாமல், வளர்ச்சி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
தேர்வு நிலை பேரூராட்சியான புவனகிரியில், செயல் அலுவலராக பணியாற்றிய செல்லப்பிள்ளை ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு செயல் அலுவலர் நியமிக்கப்படாமல், கிள்ளை பேரூராட்சி செயல் அலுவர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். அவர், கிள்ளை மற்றும் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் ஆகிய மூன்று பேரூராட்சிகளை கவனிக்க வேண்டிய நிலையில், புவனகிரி பேரூராட்சியில் அவரால் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இனால் வளர்ச்சி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
புவனகிரி பேரூராட்சியில் கடந்த பல ஆண்டுகளாக கூடுதல் பொறுப்பாக அதிகாரி நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே இங்கு பணியாற்றிய தற்காலிக ஊழியர் செய்த முறைகேடு காரணமாக, ஒரு அதிகாரி மற்றும் இளநிலை உதவியாளர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இதனால் புவனகிரி பேரூராட்சிக்கு அதிகாரிகள் வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. எனவே, இங்கு நிரந்தர செயல் அலுவரை நியமித்து அடிப்படை பணிகளில் சுணக்கமின்றி நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.