/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பட்ஜெட்டை கண்டித்து 1ம் தேதி மறியல் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அறிவிப்பு பட்ஜெட்டை கண்டித்து 1ம் தேதி மறியல் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அறிவிப்பு
பட்ஜெட்டை கண்டித்து 1ம் தேதி மறியல் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அறிவிப்பு
பட்ஜெட்டை கண்டித்து 1ம் தேதி மறியல் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அறிவிப்பு
பட்ஜெட்டை கண்டித்து 1ம் தேதி மறியல் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் அறிவிப்பு
ADDED : ஜூலை 28, 2024 06:22 AM
கடலுார், : ''மத்திய பட்ஜெட்டை கண்டித்து வரும் 1ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும்'' என, மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று கடலுாரில் கூறியதாவது:
பா.ஜ., அரசு தாக்கல் செய்த பட்ஜெட், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளன. கூட்டணி கட்சிகளை தக்க வைக்கவே பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து வரும் 1ம் தேதி மா.கம்யூ., - இந்திய கம்யூ., சார்பில் தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.
காவிரியில் கர்நாடகா அரசு தண்ணீர் திறக்காததை கண்டிக்கிறோம். மேட்டூர் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டிய நிலையில், தமிழக அரச சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
அண்ணா பல்கலையில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதை தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களில் முறைகேடு நடப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கிறது. ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்.