/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை கடலுார் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
கடலுார் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
கடலுார் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
கடலுார் மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை
ADDED : ஜூன் 18, 2024 05:43 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகையொட்டி, முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கடலுாரில் முதுநகர், திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம், ஆனைக்குப்பம், செம்மண்டலம், குண்டுஉப்பலவாடி, கோண்டூர் உள்ளிட்ட பள்ளி வாசல்களில் நேற்று காலை சிறப்புத் தொழுகை நடந்தது. பின்னர் உறவினர்கள், நண்பர்களுடன் கட்டித்தழுவி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.
விருத்தாசலம்
விருத்தாசலம் ஆலடி சாலையில் உள்ள நவாப் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று காலை 6:30 மணிக்கு மேல் சிறப்பு தொழுகை நடந்தது. நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல் தலைவர்கள், முத்தவல்லிகள் உட்பட முஸ்லீம்கள் திரளான பங்கேற்றனர். அப்போது, ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பத்தில் நேற்று காலை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் சின்னதெரு பள்ளிவாசலில் கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக சென்று கொத்வாபள்ளியில் உள்ள பள்ளிவாசலை அடைந்து, சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.