Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கலைத் திருவிழா போட்டி: கலெக்டர் பரிசு வழங்கல்

கலைத் திருவிழா போட்டி: கலெக்டர் பரிசு வழங்கல்

கலைத் திருவிழா போட்டி: கலெக்டர் பரிசு வழங்கல்

கலைத் திருவிழா போட்டி: கலெக்டர் பரிசு வழங்கல்

ADDED : ஜூன் 24, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
கடலுார், : கடலுார் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் பரிசு வழங்கினார்.

பள்ளி கல்வித் துறை சார்பில், கடலூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கலைத்திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டது. இதில் கட்டுரை, கிளாசிக்கல் நடனம், கிராமிய நடனம், ஓவியம், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

வட்டார அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவரகள், மாவட்ட அளவில் போட்டியில் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவில் 415 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாநில அளவில் 18 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர்.

அதையடுத்து, வெற்றி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா, கடலுார் புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பழனி தலைமை தாங்கினார். கடலுார் மேயர் சுந்தரிராஜா முன்னிலை வகித்தார். கலெக்டர் அருண்தம்புராஜ் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் கடலுார் சங்கர், விருத்தாசலம் துரை பாண்டியன், தொடக்க கல்வி அலுவலர்கள் கடலுார் சுகப்பிரியா, விருத்தாசலம் ஜெயச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us