/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வேதியர் பணியில் 50 ஆண்டு ராயப்பனுக்கு பாராட்டு விழா வேதியர் பணியில் 50 ஆண்டு ராயப்பனுக்கு பாராட்டு விழா
வேதியர் பணியில் 50 ஆண்டு ராயப்பனுக்கு பாராட்டு விழா
வேதியர் பணியில் 50 ஆண்டு ராயப்பனுக்கு பாராட்டு விழா
வேதியர் பணியில் 50 ஆண்டு ராயப்பனுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூன் 20, 2024 04:17 AM

கடலுார் : வேதியர் பணியில் 50 ஆண்டு நிறைவு செய்த, ராயப்பனுக்கு பாராட்டு விழா நடந்தது.
விருத்தாசலம் புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் நடந்த விழாவில், புதுச்சேரி மற்றும் கடலுார் உயர்மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன், சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் ஆகியோர் ராயப்பனை ஆசிர்வதித்தனர். புதுச்சேரி பெத்தி செமினேர் சி.பி.எஸ்.சி., பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், விருத்தாசலம் பங்கு தந்தை மரிய ஆண்டனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், ராயப்பன்-ரெஜினாமேரியின் 50வது ஆண்டு திருமண நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், பன்னுார் தொன்போஸ்கோ பள்ளி முதல்வர் ஞானபிரகாஷ் மற்றும் வில்சன், செலின், பேட்ரிக் ராஜ், ஏஞ்சல், தாமஸ், சோபியா, ஜெயராஜ், டெய்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.