/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம்
பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம்
ADDED : ஜூன் 20, 2024 04:16 AM

கடலுார் : விருத்தாசலம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 5 கடைகளுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
விருத்தாசலம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ் குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாரிமுத்து, நல்லதம்பி, சுப்ரமணியன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பழக்கடைகள், பேக்கரிகள், ஓட்டல்கள், டீ கடைகள், மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா எனவும், கெட்டுப்போன பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்திய 5கடைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல் பழக்கடைகளில் ரசாயன ஸ்பிரே பயன்படுத்தி பழுக்க வைத்த 25 கிலோ மாம்பழகம் பறிமுதல் செயது அழிக்கப்பட்டது. உணவு பாதுகாப்புச் சட்ட விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.