/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூலை 07, 2024 04:05 AM

வடலுார்: குறிஞ்சிப்பாடி அருணாச்சலா பதின்ம மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற போதைப் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜோதிலிங்கம் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் வீரசேகரன் தொடங்கி வைத்தார்.
குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் தொடங்கிய ஊர்வலம் எல்லைக்கல், பஸ் நிலையம், பெருமாள் கோவில் வழியாக பள்ளி வளாகத்தை அடைந்தது. மாணவ, மாணவிகள் போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பதாகைகள் ஏந்தி, கோஷம் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.