/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அ.தி.மு.க., கிளை செயலருக்கு கத்தி வெட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு அ.தி.மு.க., கிளை செயலருக்கு கத்தி வெட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
அ.தி.மு.க., கிளை செயலருக்கு கத்தி வெட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
அ.தி.மு.க., கிளை செயலருக்கு கத்தி வெட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
அ.தி.மு.க., கிளை செயலருக்கு கத்தி வெட்டு விருத்தாசலம் அருகே பரபரப்பு
ADDED : ஜூன் 03, 2024 06:04 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே முன்விரோதம் காரணமாக, அ.தி.மு.க., கிளை செயலரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அடுத்த கர்னத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு, 45. அ.தி.மு.க., கிளை செயலர்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல், 46, என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று அதே பகுதியில் உள்ள ஓட்டலிலிருந்து ராமு வெளியே வந்தார். அப்போது, சக்திவேல் மகன் சந்துரு, 20; தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராமுவை தலை மற்றும் கையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இதில், ராமுவின் கை விரல்கள் துண்டானது. உடன், அருகில் இருந்தவர்கள் ராமுவை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
இது குறித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சந்துருவை தேடி வருகின்றனர்.