/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தற்காப்பு கலைகளில் அசத்தும் பெண்ணாடம் இளைஞர் தற்காப்பு கலைகளில் அசத்தும் பெண்ணாடம் இளைஞர்
தற்காப்பு கலைகளில் அசத்தும் பெண்ணாடம் இளைஞர்
தற்காப்பு கலைகளில் அசத்தும் பெண்ணாடம் இளைஞர்
தற்காப்பு கலைகளில் அசத்தும் பெண்ணாடம் இளைஞர்
ADDED : ஜூலை 25, 2024 05:56 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே சின்னகொசப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் கமலேஸ்வரன், 40. இவர் வுசு, குங்பூ தற்காப்பு கலை பயிற்றுனராகவும், ஜம்ப் ரோப் (ஸ்கிப்பிங்) பயிற்சியாளராகவும் உள்ளார். ஓவினாம் என்ற தற்காப்புக் கலை போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.
தற்காப்பு கலை குறித்து அவர் கூறியது:
'வுசு போர் கலை, குங்பூ தற்காப்பு கலை; சீனாவின் கலை என்றாலும், தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவர்களால் தான் இக்கலை இந்தியாவில் இருந்து சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
வுசு, குங்பூ தற்காப்புக்கலைகள் யாரையும் துன்புறுத்தவோ, வீழ்த்தவோ பயன்படுத்தும் கருவி அல்ல. நாம் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கும், நெருக்கடியான சூழலில் நம்மை மட்டுமின்றி அனைவரையும் பாதுகாக்கும் ஓர் உடற்பயிற்சி ஆகும்.
இந்த கலைகள் வடக்கு ஷாவ்லின், தெற்கு ஷாவ்லின் என இரண்டு பாரம்பரிய முறையிலும் அல்லது இரண்டையும் ஒன்றாக சேர்த்து விளையாட்டு முறைப்படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இக்கலைகளுக்கு அங்கீகாரமும் வழங்கப்படுகிறது.
இக்கலைகளை ஆரோக்கியம், உடல் வலிமை, மன வலிமை போன்றவவைகளுக்காக பயிற்சியளித்து வருகிறோம். பயிற்சியில் வெறும் கை, கம்பு சுற்றுதல், வாள் வீச்சு, ஈட்டி என்று பயிற்சி முறைகளும் அடங்கும். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் பாம்பு, குரங்கு, வெட்டுக்கிளி, புலி, கழுகு, கொக்கு, டிராகன் போன்றவைகளின் அசைவுகளை நுட்பமாகக் கொண்டு ஜிம்னாஸ்டிக் உடன் பயிற்சியளிப்பதாகும்.
எனவே, இதனை பயிற்சி பெறுவதன் மூலம் உடல் நெகிழ்வுத்தன்மை, உடல் சுறுசுறுப்பு, பொறுமை, துல்லியமாக செயல்படுதல், வலிமை, நேர்த்தி, தைரியம், தன்னம்பிக்கை கிடைக்கிறது. பள்ளி பருவத்தில் இருந்தே இந்த பயிற்சிகளை பெற்றால் எளிதில் கற்க முடியும்.
இளைய சமுதாயத்திற்கு இலக்கு மற்றும் நோக்கம் இரண்டையும் புரியவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்ணாடம் பகுதி மட்டுமின்றி பல கிராமங்கள், நகரங்களுக்கு சென்று இந்த கலைகளை சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பயிற்சியளித்து சாதனையில் ஈடுபட வைத்து வருகிறேன்'
இவ்வாறு அவர் கூறினார்.