/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுக்குழு ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 30, 2024 04:41 AM
கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். சாந்தகுமார் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அந்தோணி ஜோசப், தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேதரத்தினம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ஜகநாதன் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், மணிவண்ணன், ரமேஷ், செந்தில்குமார், குமரகுருநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் 243-அரசாணை நடைமுறைப்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இளங்கோவன் நன்றி கூறினார்.