Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பள்ளி கைப்பிடி சுவர் இடிந்து 4 மாணவிகள் காயம்

பள்ளி கைப்பிடி சுவர் இடிந்து 4 மாணவிகள் காயம்

பள்ளி கைப்பிடி சுவர் இடிந்து 4 மாணவிகள் காயம்

பள்ளி கைப்பிடி சுவர் இடிந்து 4 மாணவிகள் காயம்

ADDED : ஜூலை 15, 2024 11:49 PM


Google News
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கைப்பிடிசுவர் இடிந்து விழுந்து 4 மாணவிகள் காயமடைந்தனர்.

பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழா முடிந்து மதிய உணவு சாப்பிட மாணவிகள் சென்றுள்ளனர். அப்போது கைப்பிடிச்சுவர் இடிந்து விழுந்ததில், மாணவிகள் ரஷிதா, 11; உமர் ரூவேதா, 11; அனன்யா, 11, பாத்திமா, 12; ஆகிய 4 பேர் காயமடைந்தனர். அவர்கள், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இச்சம்பவம் குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us