/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது
மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது
மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது
மதுபாட்டில்கள் விற்பனை நெய்வேலியில் 4 பேர் கைது
ADDED : ஜூன் 24, 2024 05:09 AM
நெய்வேலி, : நெய்வேலியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற நால்வரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி, டவுன்ஷிப் போலீஸ் ஷ்டேஷன் எல்லைக்குட்பட்ட பல இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், இந்திரா நகர் ஊராட்சி, பாரதி நகர் உதயசூரியன் மகன் விக்னேஷ், 24; சங்கர் மகன் கார்த்திக், 26; கீழூர், கிழக்கு தெரு சிவபாஸ்கர், 42; வடக்குத்து, கண்ணுத்தோப்பு, பிள்ளையார் கோவில் தெரு சக்கரவர்த்தி மகன் கோகுல், 21, ஆகியோர் மதுபாட்டில்களை வீடுகளில் பதுக்கி வைத்து விற்றது தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு மதுபாட்டில்கள் மொத்தமாக எங்கிருந்து வருகிறது. புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டதா அல்லது கள்ளச்சாராயமா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.