ADDED : ஜூன் 22, 2024 04:21 AM
குள்ளஞ்சாவடி : மதுபாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்
குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று முன்தினம், மேல்பூவாணிக்குப்பம் மற்றும், குள்ளஞ்சாவடி கடைத்தெரு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு இருவர் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்றது தெரிய வந்தது. மதுபாட்டில் விற்ற, மேல்பூவாணிக்குப்பம், அம்மன் கோவில் தெரு எத்திராஜுலு, 52; குள்ளஞ்சாவடி, இருசப்பன் நகர் பாலசுப்ரமணியன், 56, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.