/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ 110 லிட்டர் சாராயம் ராமநத்தத்தில் பறிமுதல் 110 லிட்டர் சாராயம் ராமநத்தத்தில் பறிமுதல்
110 லிட்டர் சாராயம் ராமநத்தத்தில் பறிமுதல்
110 லிட்டர் சாராயம் ராமநத்தத்தில் பறிமுதல்
110 லிட்டர் சாராயம் ராமநத்தத்தில் பறிமுதல்
ADDED : ஜூன் 21, 2024 04:44 AM
திட்டக்குடி : ராமநத்தத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 110லிட்டர் கள்ளச் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்.
ராமநத்தம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார், நேற்று மதியம் 2:00 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொரக்கவாடி அங்காளம்மன் கோவில் ஆர்ச் அருகே, அதே கிராமத்தை சேர்ந்த சின்னதுரை,45, என்பவர், லாரி டியூப்பில் சாராயத்துடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரைப் பார்த்ததும், சாராயத்தை போட்டுவிட்டு தப்பியோடினர்.
இரண்டு லாரி டியூப்பில் இருந்த 110லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். வழக்குப்பதிந்து தப்பியோடிய சின்னதுரையை தேடி வருகின்றனர்.