ADDED : ஜூன் 10, 2024 01:12 AM

நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் சிவலோகநாதர் கோவிலில் சரபேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான ஞானபார்வதி உடனுறை சிவலோகநாதர் கோவில் உள்ளது. இங்கு சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதன்படி நேற்று ராகுகாலத்தில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து சரபேஸ்வரருக்கு சங்காபிஷேகம் நடந்தது. சரபேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.