ADDED : ஜூன் 24, 2025 12:16 AM

கோவை; கோவை, ஹோப்காலேஜ் பகுதியில், தனியார் வாகன விற்பனை நிலையம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவில் பணிபுரிந்தவர், போத்தனுாரை சேர்ந்த பிரஷாந்த், 33. நேற்று இந்நிறுவனத்தின் தேவைக்காக, தண்ணீர் லாரி வந்தது. அந்த லாரி நிறுவனத்துக்குள் செல்ல முற்பட்டது.
பிரஷாந்த், லாரிக்கு வழிகாட்டிச் சென்றார். அங்கிருந்த சாக்கடை கால்வாய் சிலாப் மீது லாரி ஏறியது. சிலாப் உடைத்து லாரி கவிழ்ந்தபோது, அருகில் நின்றிருந்த பிரஷாந்த் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர். உயிரிழந்த பிரஷாந்த்தின், தாயார் மனோன்மணி, போத்தனுார் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார்.