/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ புரோசோன் மால் 'கதை கார்னிவல்' எடை கணக்கில் புத்தகம் வாங்கலாம் புரோசோன் மால் 'கதை கார்னிவல்' எடை கணக்கில் புத்தகம் வாங்கலாம்
புரோசோன் மால் 'கதை கார்னிவல்' எடை கணக்கில் புத்தகம் வாங்கலாம்
புரோசோன் மால் 'கதை கார்னிவல்' எடை கணக்கில் புத்தகம் வாங்கலாம்
புரோசோன் மால் 'கதை கார்னிவல்' எடை கணக்கில் புத்தகம் வாங்கலாம்
ADDED : ஜூன் 24, 2025 12:19 AM

கோவை; புரோசோன் மாலில், எடை அளவில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும் சிறப்பு புத்தகக் கண்காட்சியான, 'கதை கார்னிவல்' நடந்து வருகிறது. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
தனி, தனி விலையாக விற்கப்படாமல், விருப்பமான புத்தகங்களை எடை போட்டு வாங்கலாம். ஒரு கிலோ புத்தகங்கள், ரூ.549 என்ற விலை திட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஐந்து கிலோ ரூ.1,995 மற்றும், 10 கிலோ ரூ.3,490 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கண்காட்சியில், நேரடியாக கதை சொல்லல், படைப்புப் பட்டறைகள், குழந்தைகள் விரும்பும் கதாபாத்திரங்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. ஜூலை 6 வரை நடைபெறும் புத்தகக் கண்காட்சியை இலவசமாக பார்வையிடலாம்.
மேலும் விபரங்களுக்கு, 87782 10040 என்ற எண்ணில் அழைக்கலாம்.