ADDED : செப் 10, 2025 10:19 PM
கோவை; உக்கடத்தை சேர்ந்தவர் முகமது சர்ஜூன், 22. இவருக்கு அறிமுகமானவர், கரும்புக்கடையை சேர்ந்த உமர் பரூக், 22. ஒரு வாரத்துக்கு முன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் முகமது சர்ஜூனுக்கு போன் செய்த உமர் பரூக், தகாத வார்த்தைகளால் திட்டினார்.
தொடர்ந்து தெற்கு உக்கடத்தில் உள்ள, பொன் விழா நகருக்குச் சென்ற உமர் பரூக், அங்கிருந்த முகமது சர்ஜூனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்கினார். முகமது சர்ஜூனின் கையில் காயம் ஏற்பட்டது. கடை வீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.