Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இனி, வீணாகக் கூடாது விளைப்பொருட்கள்; முன்னெடுப்பு எடுத்தால் வராது பின்னடைவு

இனி, வீணாகக் கூடாது விளைப்பொருட்கள்; முன்னெடுப்பு எடுத்தால் வராது பின்னடைவு

இனி, வீணாகக் கூடாது விளைப்பொருட்கள்; முன்னெடுப்பு எடுத்தால் வராது பின்னடைவு

இனி, வீணாகக் கூடாது விளைப்பொருட்கள்; முன்னெடுப்பு எடுத்தால் வராது பின்னடைவு

ADDED : செப் 10, 2025 10:19 PM


Google News
கோவை; விவசாயிகளின் விளைபொருட்கள் வீணாகாமல் தடுக்க, வேளாண் பல்கலை, தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனைத் துறையினர், பல்வேறு முன்னெடுப்பு மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, தென்னை, வாழை, தக்காளி, கத்திரி, வெண்டை, பந்தல் காய்கறி, சின்னவெங்காயம், மக்காச்சோளம், பயறு வகை பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

ஒரே சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரே பயிரை பயிரிடும்போது கூடுதல் விளைச்சல் ஏற்பட்டு, விலை குறைந்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. விளைபொருளை சாலையில் கொட்டும் நிலை ஏற்படுகிறது. கடன் வாங்கி, விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு, இது மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையை தவிர்க்க, மத்திய அரசின் டிஜிட்டல் வேளாண் இயக்கம் என்ற, மத்திய அரசின் தகவல் தளம் பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசு சார்பில், வேளாண் துறையால் மேற்கொள்ளப்படும், 'கிராப் சர்வே' என்ற செயலி வாயிலாக, டிஜிட்டல் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு விவசாய நிலத்திலும் பயிரிட்டுள்ள பயிர்கள், பயிரிடும் முறை மற்றும் அதன் விவரங்கள், டிஜிட்டல் முறையில் துல்லியமாகப் பதிவு செய்யப்படுகிறது. இவை ஒரு பக்கம் இருந்தாலும், போதிய விலை கிடைக்காமல் சாலையோரத்தில், விவசாயப் பொருட்கள் கொட்டப்படுவது அதிகரிக்கிறது.

இதுபோன்ற நிலையை தவி ர்க்கவும், குறிப்பிட்ட பகுதிகளில் என்னென்ன நடவு செய்யலாம், விலை போன்ற முன்னறிவிப்பு, வேளாண் பல்கலை சார்பில் வழங்க வேண்டும்.

விலை கிடைக்காத பட்சத்தில், குளிர் பதன கிடங்குகளில் சேமித்து வைக்கலாம். மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கலாம் போன்ற யுக்திகள் ஏற்னவே இருந்தாலும், இதன் பலன்கள் விவசாயிகளை பெரியளவில் சென்றடையாத நிலை உள்ளது.

வேளாண் விற்பனை துறை மற்றும் தோட்டக்கலைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஒரே சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஒரே பயிரை பயிரிடும்போது கூடுதல் விளைச்சல் ஏற்பட்டு, விலை குறைந்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், சாலையில் கொட்டப்படும் நிலை ஏற்படுகிறது. கடன் வாங்கி, விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில், இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்துகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us